வாட்ஸ் அப் செயலியில் என்னென்ன புதிய வசதிகள்: ஆச்சரிய தகவல்கள்

உலகின் முன்னணி சேட்டிங் செயலியான வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய வசதிகள் வரவிருப்பதாகவும் குறிப்பாக வெகேஷன் மோட், நவீன யுஐ உள்பட புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

 

உலகின் முன்னணி சேட்டிங் செயலியான வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய வசதிகள் வரவிருப்பதாகவும் குறிப்பாக வெகேஷன் மோட், நவீன யுஐ உள்பட புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், க்யூஆர் கோட் மற்றும் ஒருசில அம்சங்கள் வழங்கப்பட்டன என்பது தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் விரைவில் வழங்கப்படவிருக்கும் வெகேஷன் மோட் என்ற அம்சம் மூலம் பயனர்கள் ஆர்ச்சிவ் செய்த சாட் பாக்ஸ்களில் புது மெசேஜ்கள் வந்தாலும் அவற்றை மியூட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது0 அதுமட்டுமின்றி கால் ஸ்கிரீன் யுஐ மாற்றம் செய்யவும் முடியும்

மேலும் வாட்ஸ் அப் செயலியில் புதிய வால்பேப்பர்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இவற்றை பயனர்கள் சாட் பாக்ஸ் பேக்கிரவுண்டாக பயனபடுத்த முடியும் என்றும் மேலும் பயனர்கள் வெவ்வேறு சாட் பாக்ஸ்களில் தனித்தனி பேக்கிரவுண்டுகளை செட் செய்து கொள்ளவும் வசதி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் வாட்ஸ்அப் செயலியின் யுசர் இன்டர்ஃபேஸ் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், புதிய டிஸ்ப்ளே அமைத்து பயனாளிகள் தங்களுடைய ஸ்டோரேஜை எளிதில் மாற்றியமைத்து, தேவையற்ற ஃபைல்களை அவ்வப்போது அழிக்கவும் வசதி தரப்பட்டுள்ளது

From around the web