5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y20s G ஸ்மார்ட்போன் வெளியீடு! 

விவோ நிறுவனத்தின் விவோ Y20s G ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் வெளியிட்டுள்ளது. 

 
5000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y20s G ஸ்மார்ட்போன் வெளியீடு!

விவோ Y20s G ஸ்மார்ட்போனின் விலை- ரூ.15.400

டிஸ்பிளே: விவோ Y20s G ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதத்தினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ Y20s G ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. 

இயங்குதளம்: இது Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ Y20s G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இது 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி portrait சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் கொண்டுள்ளது.

From around the web