இன்று இந்தியாவில் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் அறிமுகமானது!!
 

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று வெளியாகி உள்ளது. 

 

விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இன்று வெளியாகி உள்ளது. 

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.37,990
விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின்12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.41,990

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் இ3 AMOLED டிஸ்பிளே மற்றும் 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 13எம்பி tertiary சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு:  விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

வண்ணம்: விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் ஷிம்மர் ப்ளூ நிறங்களில் கிடைக்கும்.
 

From around the web