44எம்பி செல்பீ கேமராவுடன் வெளியாகிய விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் விவோ வி21 5ஜி ஸமார்ட்போன் இந்தியாவில் வெளியாகி உள்ளது. 

 
44எம்பி செல்பீ கேமராவுடன் வெளியாகிய விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன்!

1.    8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.29,990
2.    256ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.31,990

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 x 2404 பிக்சல்கள் தீர்மானம், 800 nits பிரைட்நஸ் வசதி, எச்டிஆர் +, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்டோன் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி மெயின் சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

From around the web