இந்தியாவில் மார்ச் 3 ஆம் தேதி களமிறங்கவுள்ள விவோ எஸ்9 ஸ்மார்ட்போன்!! 
 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை மார்ச் 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை மார்ச் 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி கேமரா, 44எம்பி டூயல் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி விவோ மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது.
 

From around the web