ஜெர்மனியில் மார்ச் 25ம் தேதி அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் 
 

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 25 ஆம் தேதி ஜெர்மனியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி 100 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 25 ஆம் தேதி ஜெர்மனியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்!!

சிப்செட் வசதி: மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.

டிஸ்பிளே: மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2520×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz டிஸ்பிளேவை கொண்டதாக இருக்கலாம்.

பாதுகாப்பு அம்சம்: மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டதாக இருக்கலாம்.

மெமரி அளவு: மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்புக்காக எஸ்.டி கார்டு அம்சத்துடன் ஸ்டோரேஜ் நீட்டிப்பு ஆதரவு கொண்டதாக இருக்கலாம்.

இயங்குதளம்: மோட்டோ ஜி100ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தைக் கொண்டதாக இருக்கலாம்.

கேமரா அமைப்பு: மோட்டோ ஜி100 64எம்பி பிரைமரி சென்சார், 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 16எம்பி மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி: மோட்டோ ஜி100 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவு கொண்டதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: 5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாக இருக்கலாம்.
 

From around the web