இந்தியாவில் வெளியானது Tecno நிறுவனத்தின் Camon 16 ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் Tecno நிறுவனம் டெக்னோ காமன் 16 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 
 
 

இந்தியாவில் Tecno நிறுவனம் டெக்னோ காமன் 16 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

Tecno Camon 16 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.10,999 

டிஸ்பிளே: டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் எச்டி பிளஸ் 20.5: 9 விகிதம் கொண்ட 480 நைட்ஸ் பிரகாசம் உடைய 1640 x 720 பிக்சல்கள் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் 2 ஜிஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

சேமிப்பு வசதி: டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இதனுடன் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. 

கேமரா: Tecno Camon 16 ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு AI லென்ஸ் உடன் குவாட்-கேமரா அமைப்புடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி: இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. 

இயங்குதளம்: Tecno Camon 16 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10  மற்றும் HiOS 7.0 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, மைக்ரோ யூ.எஸ்.பி கொண்டுள்ளது. 

From around the web