இந்தியாவில் ரூ. 6999 விலையில் டெக்னோ ஸ்பார்க் 7 வெளியானது!!
 

டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் மிகவும் மலிவு விலையில் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.

 
இந்தியாவில் ரூ. 6999 விலையில் டெக்னோ ஸ்பார்க் 7 வெளியானது!!

2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை- ரூ. 6999 
3 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை- ரூ. 7999

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

வண்ணம்: டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் ஸ்ப்ரூஸ் கிரீன், மேக்னட் பிளாக் மற்றும் மார்பியஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கும். 

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல் தெளிவுத்திறன், 90.34% பாடி டிஸ்பிளே விகிதம் மற்றும் 480 நைட்ஸ் பிரகாசத்தினைக் கொண்டு இருக்கிறது.

சிப்செட் வசதி: இது ஆக்டா கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் சிபியு ஹீலியோ ஏ 25 சிப்செட் மூலம் இயங்குவதாக இருக்கிறது.

மெமரி அளவு: இது 3 ஜிபி ரேம் மற்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் கூடுதலாக 256 ஜிபி வரை எஸ்.டி கார்டு மூலம் நீட்டிப்பதாக இருக்கிறது.

கேமரா: இது 16 எம்பி ஏஐ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா கொண்டு இருக்கிறது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் 2.0 மற்றும் ஸ்மார்ட் கைரேகை சென்சார் கொண்டு இருக்கிறது.

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டு இருக்கிறது.
 

From around the web