சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் இந்தியவிலை ரூ. 1,49,999!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஆன்லைன் வெளியீட்டு முறையில் சமீபத்தில் வெளியிட்டது. 

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஆன்லைன் வெளியீட்டு முறையில் சமீபத்தில் வெளியிட்டது. 

இந்த கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பதிவானது செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை -ரூ. 1,49,999

டிஸ்பிளே: கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் உட்புறத்தில் 7.3 இன்ச் QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது. மேலும் வெளிப்புறத்தில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. 

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 650 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டுள்ளது.

இயங்குதளம்:  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5 கொண்டுள்ளது.

கேமரா:  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்,  10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது,

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் 5ஜி SA/NSA, சப்6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது.

பேட்டரி: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

நிறம்: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web