சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது Samsung கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S20 FE என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S20 FE என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2400 x 1080p தீர்மானத்தினைக் கொண்டுள்ளது, இது இன்பினிட்டி O பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேயுடன் 2.5D கர்வுடு டெம்பர் கிளாஸால் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆனது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 அல்லது எக்ஸினோஸ் 990 SoC ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது Android 10 OS உடன் கூடிய ஒன் UI 2.0 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவு: இது 6 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி S20 FE OIS, 12MP அதி வைட் ஆங்கிள் லென்ஸ், மற்றும் OIS 8MP 3x ஆப்டிகல் ஜூம் திறன் டெலிஃபோட்டோ லென்ஸ், 12MP வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டதாகவும், முன்பக்கத்தில், சாதனம் 32 எம்.பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4,500 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது.

நிறம்: இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

From around the web