இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் ஸ்மார்ட்போன்!!
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
 
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனின் விலை - ரூ. 49,999 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது, 

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி எஸ்20 பேன் எடிஷன் ஸ்மார்ட்போன் 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், மற்றும் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி 3.1 போன்றவையும் உள்ளது.

பேட்டரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

நிறம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web