அசத்தல் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்! 

சாம்சங் நிறுவனம் இன்று அதன் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. 

 

சாம்சங் நிறுவனம் இன்று அதன் சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. 

வண்ணம்: சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், நேர்த்தியான ப்ளூ மற்றும் எமரால்டு பச்சை வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மற்றும் எக்ஸினோஸ் 850 செயலி மூலம் இயங்குவதாகவும் உள்ளது. 

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம், 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 64 ஜிபி சேமிப்பு வசதி, 128 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 1டிபி மெமரி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது. 

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவை கொண்டுள்ளது.

கேமரா: 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

From around the web