வியட்நாமில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் வியட்நாமில் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

 

சாம்சங் நிறுவனம் வியட்நாமில் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே மற்றும் 720×1,600 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web