விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை- ரூ.26,499
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை- ரூ.27,999
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம்.
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம்.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயங்குவதாக இருக்கலாம்.
கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம்நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக இருக்கலாம்.
பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி 25வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.