இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்! 
 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.

 
இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்:

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC வசதி கொண்டுள்ளது.

கேமரா அளவு: இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web