இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்!!
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனை களம் இறக்கியுள்ளது. 
 
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனை களம் இறக்கியுள்ளது. 

நிறம்: கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது டெனிம் பிளாக், டெனிம் ப்ளூ, டெனிம் ரெட் மற்றும் டெனிம் க்ரே போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 1560×720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி:  சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 1.5GHz மூலம் இயக்கக்கூடிய மீடியாடெக் எம்டி6739 குவாட்கோர் எஸ்ஓசி கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக 64 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

கேமரா: இது முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு, முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

பேட்டரி அளவு:  சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 7.75 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு:  சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் இரட்டை 4ஜி வோல்ட்இ கொண்டுள்ளது.


 

From around the web