வெளியானது 48எம்பி ரியர் கேமரா வசதி கொண்ட ஒப்போ ரெனோ5 Z 5ஜி! 
 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் சிங்கப்பூரில் அறிமுகம் ஆகியுள்ளது.

 

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போனின் விலை- ரூ.30,030 

ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்:

டிஸ்பிளே: ஒப்போ ரெனோ5 Z 5ஜி 6.43 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசது, 20:9 என்ற திரைவிகித அளவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ரெனோ5 Z 5ஜி ColorOS 11.1 UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

சிப்செட் வசதி: ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது. 

மெமரி அளவு: ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

From around the web