48எம்பி கேமராவுடன் இந்தியாவில் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்! 
 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியாவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 
48எம்பி கேமராவுடன் இந்தியாவில் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்!

டிஸ்பிளே: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி-95 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவு: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆதரவினைக் கொண்டுள்ளது.

From around the web