சீனாவில் அசரவைக்கும் அம்சங்களுடன் களமிறங்கிய ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்! 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் வெளியிட்டு உள்ளது. 

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் வெளியிட்டு உள்ளது. 

1. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.28,000
2. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.30,810

நிறம்: ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 20:9 என்ற அளவிலான டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

பிராசஸர் வசதி: ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது அட்ரினோ 650 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சம்:  ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. 

மெமரி: இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது. 

பேட்டரி: இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளதாக உள்ளது, இது 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. 

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web