மீடியாடெக் Dimensity 1200 6nm SoC பிராசஸர் உடன் வெளியான ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன்!!
ரியல்மி நிறுவனத்தின் ஜிடி நியோ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகியுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.20,145
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.22,390
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.25,750
வண்ணம்: இது பேண்டஸி, சில்வர், பிளாக் நிறங்களில் கிடைக்கும்.
டிஸ்பிளே: இது 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொண்டுள்ளது.
மெமரி அளவு: இது 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
பிராசஸர் வசதி: இது மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர் வசதி கொண்டுள்ளது.
இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
கேமரா அளவு: இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவு: இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: இது இரட்டை சிம் 5ஜி, வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.