செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள ரியல்மி C17 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் C17 என்ற ஸ்மார்ட்போனை செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் C17 என்ற ஸ்மார்ட்போனை செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் ரியல்மி C17 ஸ்மார்ட்போன் சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.

டிஸ்பிளே: ரியல்மி C17 ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் அளவிலான ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெவ்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி: ரியல்மி C17 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரீனோ 610 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: ரியல்மி C17 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகா பிக்சலுடன் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சலுடன் கூடிய 119 டிகிரி வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் மோனோகுரோம் கேமராவினைக் கொண்டுள்ளது.

நிறம்: இது லேக் கிரீன், நேவி ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகவுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி C17 ஸ்மார்ட்போன் விரல் ரேகை சென்சார் வசதியினை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

From around the web