மார்ச் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்!
 

போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வியட்நாமில் மார்ச் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 
மார்ச் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வியட்நாமில் மார்ச் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா அளவு: இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா, 20 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு அளவினைக் கொண்டதாகவும், மேலும் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி எல்டிஇ, வைஃபை802, ப்ளூடூத் 5.0 கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குவதாக உள்ளது.
 

From around the web