நாளை வெளியாகும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!
 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் நாளை  அறிமுகம் ஆகவுள்ளது.

 
நாளை வெளியாகும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் நாளை  அறிமுகம் ஆகவுள்ளது.

இதுவரை கசிந்துள்ள ஆன்லைன் விவரங்கள்:

டிஸ்பிளே: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் ஐபிஎஸ் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியினையும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியினைக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிராசஸர் வசதி: இது 2.96ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் வசதியினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

இயங்குதளம்: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

கேமரா அளவு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 8 அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டு இருக்கும். 

பேட்டரி அளவு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கும்.

மெமரி அளவு: போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டு இருக்கும்.

இணைப்பு ஆதரவு: இது புளூடூத் 5, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்  போன்றவற்றினைக் கொண்டு இருக்கும்.

From around the web