உக்ரேனியாவில் ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போன் வெளியானது!!
 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனை உக்ரேனியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 

 

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போன் கசிந்துள்ள விவரங்கள்:

டிஸ்பிளே: ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, முழு எச்டி  ரெசல்யூஷன், 90.8 சதவீத திரை விகிதம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 95 12nm சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவாக மைக்ரோ எஸ்டி கார்டாக 256 ஜிபி வரை சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா: இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டதாக உள்ளது. 

பேட்டரி: இது 30W VOOC பாஸ்ட் சார்ஜிங்குடன் 4,310mAh பேட்டரியைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11 கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிஹெர்ட்ஸ்), புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.
 

From around the web