4230 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 
 

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் சீனாவில் இன்று வெளியாகியுள்ளது.

 
4230 எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.14,900

ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த ஹீலியோ பி35 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவு: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. 

மெமரி அளவு: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன் இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட கொண்டுள்ளது.

From around the web