விரைவில் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளியீடு! 
 

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

 
விரைவில் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளியீடு!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

டிஸ்பிளே: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு, 720 x 1560 பிக்சல் தீர்மானம், 19.5:9 திரைவிகிதம், 400 nits பிரைட்நஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும்  முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் 4 ஜி ,வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
 

From around the web