இந்தியாவில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்!

 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் என்றால் நோக்கியா, நோக்கியா என்றால் மொபைல்போன் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் பல நிறுவனங்களின் போட்டியால் கிட்டத்தட்ட நோக்கியா காணாமல் போனது. ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து நோக்கியா நிறுவனம் அசத்தி வருகிறது. அந்த வகையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நோக்கியா மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்த வாரம் அதாவது நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நோக்கியாவின் சமூக வலைதள பக்கங்களிலும் இதுகுறித்த தகவல் பதிவாகியுள்ளது

நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த டீசர் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நோக்கியா  ஸ்மார்ட்போனின் பின்புறம் மட்டும் தெரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இதே மாடல் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

nokia

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளேவை கொண்டது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் என்பதால் ஸ்பீடு அதிகமாக இருக்கும். அதிகபட்சம் 3 ஜிபி ரேம் மற்றும் அதிகபட்சம் 64 ஜிபி மெமரி வசதியை பெற்றுள்ளது. டூயல் சிம் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா என்பதால் இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 4500 எம்ஏஹெச் பேட்டரி என ஒரு நல்ல ஸ்மார்ட்போனுக்குரிய அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,500 முதல் இருக்கும் என்றாலும், அடுத்த வாரம் இதன் விலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web