இந்தியாவில் களம் இறங்கியது ரோக் போன் 3 இன் புதிய வேரியண்ட்!!

அசுஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ரோக் போன் 3 கேமிங் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது, ஏறக்குறைய 4 மாதங்கள் கழித்து அந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் வெளியாகி உள்ளது. 

 

அசுஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ரோக் போன் 3 கேமிங் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது, ஏறக்குறைய 4 மாதங்கள் கழித்து அந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் வெளியாகி உள்ளது. 

டிஸ்பிளே: ரோக் போன் 3 ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் உடன் 2340×1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: அசுஸ் ரோக் போன் 3  ஆனது 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 650 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ரோக் போன் 3 ஸ்மார்ட்போன் 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி,  12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ கொண்டுள்ளது.

கேமரா: இது பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா,  5 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில்  24 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது யுஎஸ்பி டைப்-சி,  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 
பேட்டரி: இது 6000 எம்ஏஹெச் பேட்டரியினைக் கொண்டதாக உள்ளது.


 

From around the web