இன்ஸ்டாகிராமில் புதிய வசதி: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

 

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருவதால், மிக விரைவில் இணையதள பயனாளிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அவ்வப்போது புதுப்புது வசதிகள் பயனாளிகளுக்கு கிடைத்து வரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் இரண்டு முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. 

இன்ஸ்டாகிராம் செயலியின் புது அப்டேட்டில் இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு புதியதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. ரீல்ஸ் மற்றும் ஷாப் போன்ற அம்சங்களை தொடர்ந்து அதிக பயனர்கள் பயன்படுத்தியதால் இந்த புதிய வசதியை இன்ஸ்டாகிராம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

instagram

அதேபோல் இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில் இதுவரை மாற்றம் செய்யாத நிலையில் தற்போது அதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் ரீல்ஸ் மற்றும் ஷாப் டேப்கள் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி ஆகியவை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இரண்டு மாற்றங்களும் பயனாளிகளின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த மாற்றங்கள் ஓகே என்றாலும் நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி ஆகியவை நீக்கப்பட்டதற்கு ஒருசில பயனாளிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வரும் காலத்தில் இன்ஸ்டாகிராமில் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று கூறப்படுவதால் பயனாளிகளுக்கு இனி கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web