தவறாக அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டுமா?

 

ஜிமெயில் என்பது இன்றைய நாளில் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. உலகில் பெரும்பாலானோர் சில முக்கிய விஷயங்களை ஜிமெயில் கணக்கு மூலமாகவே பெற்று வருகின்றனர். இதனை கணக்கில் கொண்டு ஜிமெயில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளையும் ஏற்கனவே இருக்கும் வசதிகளை எளிதாக்கும் வகையிலும் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. 

இந்த நிலையில் ஜிமெயிலில் உள்ள ஒரு முக்கிய அம்சம் Unsend என்ற ஒரு வசதி. தவறுதலாக தவறான தகவல்களையோ அல்லது தவறானவர்களுக்கோ மெயில் அனுப்பிய அனுபவத்தை நாம் எல்லோரும் சில நேரங்களில் செய்திருப்போம்

அந்த நேரத்தில் உடனே Unsend பொத்தானின் தேவையை நீங்கள் உணர்வீர்கள். Unsend பொத்தானை அழுத்திவிட்டால் அந்த மெயில் சம்பந்தப்பட்டவருக்கு செல்லாது. ஜிமெயிலில் இருக்கும் இந்த அன்சென்ட் வசதி குறித்து மேலும் பார்ப்போம். 

gmail

அதாவது நீங்கள் ஒரு ஈமெயிலை அனுப்பும்போது, Undo என்ற பொத்தான் உங்கள் திரையில் தோன்றும். ஆனால் அது அதிகபட்சம் 30 விநாடிகள் மட்டுமே தெரியும்.  அதற்குள் Undo பொத்தானை அழுத்தினால் மின்னஞ்சல் ரத்து செய்யப்படும். இல்லையேல் அந்த இமெயில் சென்றுவிடும்

ஒருவேளை நீங்கள் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் Undo பொத்தான் மறைந்து விடும். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

தவறாக அனுப்பப்பட்ட மெயிலை நீங்கள் திரும்ப பெற விரும்பினால் ஸ்க்ரீனில் இடது மூலையில் Message sent மற்றும் Undo அல்லது View message போன்ற ஆப்சன்கள் இருக்கும். இவற்றில் Undo என்பதை க்ளிக் செய்தால் அந்த மெயில் அனுப்பப்படாது

மேலும் Undo என்பது 10 வினாடிக்கும் மேல் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயிலுக்குச் சென்று அதன் வலதுபுறத்தில் உள்ள செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் all settings என்பதை தேர்வு செய்து அதில் உள்ள ஆப்சனான Undo Send என்பதை க்ளிக் செய்தால் 5, 10, 20 அல்லது 30 விநாடிகள் என்ரு வரும். அதில் உங்கள் விருப்பம்போல் வினாடியை தேர்வு செய்தால் நீங்கள் தேர்வு செய்த கால அளவுக்கு Undo ஆப்சன் நீங்கள் மெயில் அனுப்பும்போது தெரியும்

From around the web