அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியானது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

 

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை - ரூ. 9499

டிஸ்பிளே: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கேமரா: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

நிறம்: இது மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web