அமெரிக்காவில் களம் இறங்கியது எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன்!!
 

எல்ஜி நிறுவனம் எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. 

 

எல்ஜி நிறுவனம் எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்  பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. 

சிப்செட் வசதி: எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்:  எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. 

மெமரி அளவு: எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. 

கேமரா: எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் குவால்காம் அதிவேக சார்ஜிங்க் 4.0 ஆதரவைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web