ஐடெல் நிறுவனத்தின் ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் வாட்டர் டிராப் 2.5டி வளைந்த முழு லேமினேட் டிஸ்ப்ளே மற்றும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவு: இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதி கொண்டதாக உள்ளது.
கேமரா: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் பேஸ் அன்லாக், மல்டி ஃபீச்சர் கைரேகை சென்சார் போன்றவற்றினை பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
பேட்டரி அளவு: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.
சிறப்பு அம்சம்: ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 1.4 GHz குவாட் கோர் செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.