சீனாவில் வெளியான ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்! 
 

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் வெளியாகி உள்ளது. 

 
சீனாவில் வெளியான ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் வெளியாகி உள்ளது. 

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை- ரூ.13,350
ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.13,350
ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.16,700

ஐக்யூ யூ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

வண்ணம்: இது யா கிரே மற்றும் மேஜிக் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும்.

டிஸ்பிளே: இது 1080 x 2408 பிக்சல் தீர்மானம், 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 20:07:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இது ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: இது ஐக்யூ யூ 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

கேமரா: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாக உள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டதாக உள்ளது.

From around the web