ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வெளியீடு!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலினை இன்று வெளியிட்டு உள்ளது. 
 

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலினை இன்று வெளியிட்டு உள்ளது. 

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போனின் 128 ஜிபி மாடல் விலை- ரூ.129900 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போனின் 256 ஜிபி மாடல் விலை- ரூ.139900 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போனின் 512 ஜிபி மாடல் விலை- ரூ.159900 

டிஸ்பிளே: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்பிளே உடன் 2778×1284 பிக்சல் தீர்மானம் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது சிறப்புமிக்க சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி வகைகளில் வெளியாகி உள்ளது. 

இயங்குதளம்:  ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன் ஐஓஎஸ் 14 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: இது டூயல் சிம் ஸ்லாட், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி கொண்டுள்ளது. 

பேட்டரி: லித்தியம் அயன் பேட்டரி கொண்டுள்ளது.

கேமரா: இந்த ஐபோன் பின்புறத்தில் 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. 

ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் போன்றவற்றைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன் மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. மேலும் இது 5 ஜி ஆதரவு 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5 கொண்டுள்ளது. 

நிறம்: ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் கோல்ட், கிராஃபைட், பசிபிக் ப்ளூ மற்றும் சில்வர் கலர் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web