பிப்ரவரி 2 வது வாரம் அறிமுகமாகும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!!
 

பிப்ரவரி 2 வது வாரம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதாக இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

பிப்ரவரி 2 வது வாரம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதாக இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வண்ணம்: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் மொரன்டி கிரீன், 6 டிகிரி பர்பில், ஏஜியன் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாக உள்ளது.

டிஸ்பிளே: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 720×1600 பிக்சல்கள் மற்றும் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

கேமரா:இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இரண்டு கியூவிஜிஏ சென்சார்கள் மற்றும் முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி சென்சாரினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன், 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 4 ஜி ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

From around the web