நாளை இந்தியாவில் வெளியாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம் ஆகவுள்ளது. 

 
நாளை இந்தியாவில் வெளியாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் குறித்து ஆன்லைனில் கசிந்துள்ளவை:

டிஸ்பிளே: இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிப்செட் வசதி:  இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி பிராசஸர் வசதியினைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இயங்குதளம்: இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

மெமரி அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது.

கேமரா அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், ஏஐ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டு இருக்கும்.

பேட்டரி அளவு: இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18-வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கும்.

இணைப்பு ஆதரவு: வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

From around the web