மடிப்பு ரக வகையில் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ள ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்!! 

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன் ஆனது மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் என்ற பெயரில் பிப்ரவரி 22 ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன் ஆனது மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் என்ற பெயரில் பிப்ரவரி 22 ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஆனது 8.01 இன்ச் மடிப்பு திறை, 2480 x 2220 தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவினைக் கொண்டு இருக்கலாம், மேலும் வெளிப்புற தோற்றம் என எடுத்துக் கொண்டால் டிஸ்ப்ளே 6.45 இன்ச் அளவில் இருக்கலாம்.

இயங்குதளம்:  ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

கேமரா: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் ஐந்தாம் நிலை கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் கிரீன் 9000 சிப்செட் மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம்.


 

From around the web