விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ள ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன்!
 

ஹானர் நிறுவனத்தின் ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என்று கூறப்படுகின்றது.

 
விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ள ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன்!

ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:

டிஸ்பிளே: ஹானர் பிளே 20 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது 12bn UniSoC Tiger T610 பிராசஸர் உடன் மாலி ஜி52 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா அளவு: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

From around the web