20 கோடி Android பயனாளர்களுக்கு சிக்கல்.. முக்கிய செயலிகள் வேலை செய்யவில்லை.. என்ன செய்ய வேண்டும்?

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே Android செயலிகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக Android 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் செய்தி…

android

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே Android செயலிகளின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக Android 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் Google தனது Play Integrity API-யை புதிய முறையில் அப்டேட் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது செயலிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இனி Android 13 அல்லது அதற்கு மேல் உள்ள மொபைல்கள் தான் செயலிகளை சீராகவும் பாதுகாப்பாகவும் இயக்கும் வாய்ப்பு பெறும். ஆனால் Android 12 அல்லது 12L போன்ற பழைய பதிப்புகளில் செயலிகள் வேலை செய்யாமல் போகலாம், சில அம்சங்கள் செயல் இழக்கலாம் அல்லது முற்றிலும் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.

இந்த அப்டேட் காரணமாக 20 கோடிக்க்கும் மேற்பட்ட பயனர்கள் இன்னும் Android 12 அல்லது 12L-ஐ பயன்படுத்துவதால் சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பண்பாட்டு செயலிகள் மட்டுமின்றி, வங்கிச் சேவைகள் போன்ற முக்கிய செயலிகளும் தற்போது புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். ஒரு சாதனத்தில் கடந்த 12 மாதங்களில் பாதுகாப்பு அப்டேட் இல்லையெனில், அவற்றில் பணப்பரிமாற்றம் போன்ற முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியாமல் போகும். செயலி இருந்தாலும் வேலை செய்யாது.

சில மொபைல் நிறுவனங்கள் Android 12க்கு தற்காலிக பாதுகாப்பு அப்டேட் வழங்கலாம். ஆனால் அது நிலைத்ததாக இருக்காது. அதனால் பழைய மொபைல்களில் புதிய செயலிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது இனிமேல் சாத்தியமில்லை.

எனவே உங்கள் மொபைல் Android 13-ஐ ஆதரிக்கிறதா என்று பாருங்கள். ஆதரித்தால் உடனே அப்டேட் செய்யுங்கள். இல்லை என்றால் புதிய மொபைலை வாங்கும் நேரம் இது தான். பாதுகாப்பும் செயல்பாடும் இரண்டும் முக்கியம் என்பதால் பழைய பதிப்பில் இருந்து வெளியே வருவது மிக அவசியம்.

இப்போது அப்டேட் செய்வது உங்கள் செயலிகள் தொடர்ந்தும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வேலை செய்ய உறுதி தரும்.