10 கோடி டவுன்லோடுகள்: கூகுள் ப்ளே ஸ்டோரில் சாதனை செய்த செயலி!

 

கூகுள் ப்ளே ஸ்டோரில் கூகுளின் தயாரிப்பு ஒன்று 10 கோடிக்கும் மேல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கூகுள் நிறுவனத்தின் பல செயலிகளில் ஒன்று கூகுள் ஒன் செயலி. கூகுள் பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்து புதிய சாதனையை இந்த செயலி எட்டியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த ஒருசில செயலிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

google one

கூகுள் ஒன் செயலி பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்பதால் இந்த எண்ணிக்கை மிகக்குறுகிய காலத்தில் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக ஒப்போ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த செயலி டீபால்ட் செயலியாக உள்ளது என்பது பலரும் அறிந்ததே.

கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதை கூகுள் ஒன் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது மட்டுமின்றி கூகுள் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் பேமிலி ஷேரிங் உள்ளிட்ட சேவைகளுக்கான வசதியும் இதில் உண்டு என்பது இந்த செயலியின் சிறப்பு ஆகும். மேலும் சமீபத்தில் கூகுள் ஒன் சேவையில் விபிஎன் (VPN) சேவையும் இணைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்

From around the web