அன்று விறகு அடுப்பு காலத்தில் சிந்தும் குடும்பத்தலைவியின் கண்ணீர்! இன்று சிலிண்டர் காலத்தில் குடும்பமே சிந்தும் கண்ணீர்!!: தயாநிதி மாறன்;

விலைவாசி என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடந்த சில மாதங்களாக அதிகமாக காணப்படுகிறது. அதோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தயாநிதி மாறன்

இது குறித்து மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு ரூபாய் 490 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூபாய் 915 ஆக அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறினார். இன்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 12 ரூபாய் மானியமாக தருகிறது ஒன்றிய அரசு என்றும் பேசினார் தயாநிதிமாறன்.

விறகு அடுப்பால் குடும்பத்தலைவிக்கு  மட்டுமே கண்ணீர் வடித்த நிலையில் என்று குடும்பமே கண்ணீர் வடிக்கிறது என்றும் தயாநிதி மாறன் கூறினார். வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 2 ஆயிரத்து 234 ஆக உயர்த்தி விட்டது ஒன்றிய அரசு என்றும் மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசினார்.

2019-2020 ஆம் ஆண்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, செஸ் வாயிலாக ஒன்றிய அரசுக்கு ரூ 1.78 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்றும் கூறினார். 2020 முதல் 2021 ஆம் ஆண்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, செஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு வருவாய் ரூபாய் 3.72 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

ஒன்றிய அரசின் வருவாய் உயர்ந்தாலும் மாநிலங்களுக்கு வெறும் ரூபாய் 19,972 கோடி தான் பிரித்து அளிக்கப்படுகிறது என்றும் தயாநிதி மாறன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment