ஆர்சிபிய தோக்கடிச்ச அணிக்கு எல்லாம்.. பிளே ஆப் போட்டியில் நேர்ந்த கதி.. அப்ப ராஜஸ்தான் நிலைமை..

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், கோப்பையை வெல்லப் போவது ராஜஸ்தானா அல்லது ஹைதராபாத்தா அல்லது கொல்கத்தா அணியா என்பதை மட்டும் தெரிந்து கொள்வதே பாக்கி உள்ளது. முன்னதாக இந்த 3 அணிகளுடன் கம்பீரமாக பிளே ஆப் சுற்றுக்கு என்ட்ரி கொடுத்திருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஆனால், எதிர்பார்த்ததை விட சிறந்த ஆட்டத்தை தங்களின் முதல் பிளே ஆப் ஆட்டத்திலேயே அவர்கள் வெளிப்படுத்த தவறியதால் சோகத்துடன் அந்த அணி வெளியேறி இருந்தது. மேலும் தங்களின் கடைசி லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இத்தனை வேகமாக ஒரே பிளே ஆப் போட்டியுடன் வெளியேறுவதற்கு தானா என்றும் பலர் ஆர்சிபி அணியை விமர்சித்தும் வருகின்றனர்.

இதனிடையே, எலிமினேட்டர் போட்டியை மறந்த ரசிகர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கும் தற்போது வந்து விட்டனர். இதில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 26 ஆம் தேதியன்று இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், ஆர்சிபியை பிளே ஆப் போட்டிகளில் வீழ்த்திய அணிக்கு நடந்ததை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதாவது ஆர்சிபி அணியை இறுதிப்போட்டியில் இல்லாமல் மற்ற பிளே ஆப் போட்டிகளில் வெளியேற்றிய அணி, அந்த சீசனில் இதுவரை கோப்பையை வென்றதே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. கடந்த 2010 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை வெளியேற்றிய மும்பை அணி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

இதே போல, 2015 ஆம் ஆண்டு ஆர்சிபியை வெளியேற்றிய சிஎஸ்கே இறுதி போட்டியிலும், 2020 ஆம் ஆண்டு அவர்களை வெளியேற்றிய ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 2 விலும் தோல்வி அடைந்திருந்தது. இப்படி 2021-ல் கூட ஆர்சிபி வெளியேற காரணமாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அவர்கள் வெளியேற காரணமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிப் போட்டியில் தோல்வியடைய இந்த முறை ஆர்சிபி வெளியேற்றிய அணியாகவும் ராஜஸ்தான் தான் உள்ளனர். ஏறக்குறைய ஐந்து சீசன்களாக ஆர்சிபியை பிளே ஆப் சுற்றில் வெளியேற்றிய அணி தோல்வியடைந்து வருவதால் இந்த முறை ராஜஸ்தான் தற்போது குவாலிஃபயர் 2 அல்லது இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து விடுமா என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...