சரவெடி தயாரிப்பை தடுக்க 4 பேர் கொண்ட ஆய்வுக்குழு! அதிரடி காட்டும் விருதுநகர் கலெக்டர்;

நம் தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக காணப்படுகிறது விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக இருந்தாலும் அங்கு அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்த பேரியம் நைட்ரேட் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி ஒரு சில இடங்களில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கு தயாரிப்பை தடுக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிப்பை தடுக்க 4 பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய 4 பேர் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும் சரவெடிக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment