இக்கட்டான நிலையில் இந்திய கிரிக்கெட் டீம்! இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு!

தற்போது இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி எதிர்பாராதவிதமாக படுதோல்வி அடைந்தது.

இதனால் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியை சரிகட்டும் விதமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டு வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை பறக்க விட்டார்கள், அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

இதனால் இன்று நடக்க இருக்கின்ற இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு இக்கட்டான காணப்படுகிறது, ஏனென்றால் மூன்று ஒருநாள் போட்டியை கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தென்ஆப்பிரிக்கா அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தொடரையும் வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மத்தியில் கேப்டன் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.