தடுப்பூசி ஒன்றும் கட்டாயம் இல்லை; இருந்தாலும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தடை!!

நம் தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 வகுப்பு உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

சிவன் குட்டி

இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதனைப் போலவே நம் அண்டை மாநிலமான கேரளா அரசும் கூறியிருந்தது.

ஆனால் பல ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியுள்ளார்.

அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க முடியாது என்று கூறினார். அவர்களை அனுமதித்தால் நாங்களே தடுப்பூசி செலுத்தாதவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அமையும் என்று கேரளா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி கூறினார்.

கேரளாவில் ஆசிரியர்கள் கடும் தடுப்பூசி கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறவில்லை இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களை பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கேரளாவில் 5000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிகளுக்கு செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment