ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆனால் இவர்கள் மட்டும்தான் !!.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து அரசு பணி தேர்வுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் படிபடியாக குறைந்து வருவதால் தற்போது இந்த ஆண்டு அனைத்து தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான ‘டெட்’ தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது.
இந்த தேர்வுகளுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்று (14-ம்தேதி) தொடங்குகிறது. இந்தத் தேர்வில் தாள்-1 தேர்வைஇடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி. எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் தாள்-2 எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தகுதி உடையவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.trb.tn.nic.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.250 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்வுக்கு வயது வரம்பு கட்டாயம் இல்லை என்றும் இதற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட்இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் தகுதி உடையவர்கள் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
