டீச்சர் மீது மலர்ந்த காதல்… மாணவன் தற்கொலையில் பகீர் பின்னணி?

சென்னை அம்பத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவன் கடந்த மே மாதம் பிளஸ் 2 முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவன் மாநில கல்லூரிக்கு சென்றுவிட்டு, கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சட்டவிரோத குவாரிகள் – ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு..!!

இத்தகைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக மாணவனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவன் படித்த பள்ளியில் ஷர்மிளா என்ற ஆசிரியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.

இந்தியாவிலேயே முதல் முறை… தேவாங்கு இனத்தை காக்க முதல்வர் நடவடிக்கை!!

இதன் காரணமாக ஷர்மிளா தனது காதலை முறித்துக்கொண்டதால், விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அம்பலமானது. பின்னர் ஷர்மிளாவை கைதுசெய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment