ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி: ஈரோடு கிழக்கு தேர்தலில் எதிரொலிக்குமா?.

திமுக அரசு தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதை அடுத்து இந்த அதிருப்தி ஈரோடு கிழக்கு தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓட்டுகள் எப்போதும் திமுக கூட்டணிக்கே விழும் நிலையில் இந்த முறை அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக கூட்டணி காப்பாற்றவில்லை என்றும் எனவே திமுக கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டோம் என்றும் பல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அதிருப்தி எதிரொலிக்குமா?.என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.