Connect with us

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்றுடன் காலக்கெடு நிறைவு !!

TRB

Tamil Nadu

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்றுடன் காலக்கெடு நிறைவு !!

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்றுடன் காலக்கெடு நிறைவு !!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதற்கு ஆசிரியர் தகுதி  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.

இந்த தேர்வுகளில் விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு  ரூ. 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினர்களுக்கு ரூ. 250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இத்தேர்வுகளை  தமிழக அரசின் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் (14-03-2022 முதல் 13-04-2022) விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே கூறியிருந்தது.

அந்த வகையில் ஆசிரியர் தகுதிதேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும், இணையதளத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக விண்ணப்பிக்க  கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top